×

இணையதள கேள்வி பதில் நிகழ்ச்சி; தோழியின் கணவரை திருமணம் செய்தீர்களா?.. ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிர்ச்சி

புதுடெல்லி: ஒன்றிய மகளிர்நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இரானி. இவர் கடந்த 2001ல் ஜூபின் இரானியை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஜோர் என்ற மகனும், ஜோயிஷ் என்ற மகளும் உள்ளனர். ஸ்மிருதி இரானியை திருமணம் செய்யும் முன்னர், ஜூபின் இரானி ஏற்கனவே மோனா இரானியை திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்கு ஷனெல்லே என்ற மகள் உள்ளார். குறிப்பாக மோனாவும், ஸ்மிருதி இரானியும் தோழிகள் என்று கூறப்படுகிறது. எனவே மோனாவின் கணவரைத்தான் ஸ்மிருதி இரானி மணந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் ‘ என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்’ என்று பதிவிட்டு கேள்வி பதிலுக்கு பதில் அளித்தார்.

அப்போது ஒருவர் அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம்,’ நீங்கள் உங்கள் தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டீர்களா?’ என்று கேட்டார். அதற்கு ஸ்மிருதி இரானி அளித்த பதில்: இது உண்மைஅல்ல. மோனா என்னை விட 13 வயது மூத்தவர் என்பதால் என்னுடைய குழந்தை பருவ தோழியாக இருக்க முடியாது. மேலும் மோனாஒரு குடும்ப பெண். அரசியல்வாதி அல்ல. அவரை தேவையில்லாமல் இழுக்காதீர்கள். என்னுடன் சண்டையிடுங்கள் அரசியலுடன் தொடர்பில்லாத ஒருவரை இந்த சாக்கடையில் இழுக்காதீர்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post இணையதள கேள்வி பதில் நிகழ்ச்சி; தோழியின் கணவரை திருமணம் செய்தீர்களா?.. ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Smriti Irani ,New Delhi ,Union Minister for Women's Welfare ,Zubin Irani ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு